ADDED : ஏப் 28, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இரு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியனுார் கணுவாப்பேட் புதுநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, கொத்தனார். இவரது மனைவி ஞானாம்பாள், 33; தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 25ம் தேதி அனைவரும் சாப்பிட்டு துாங்கிய நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணியளவில் ஞானாம்பாள் வீட்டு குளியலறையில் அவரது புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.