மூதாட்டிக்கு கொலை மிரட்டல் தாய்,மகன் மீது வழக்கு பதிவு
மூதாட்டிக்கு கொலை மிரட்டல் தாய்,மகன் மீது வழக்கு பதிவு
UPDATED : நவ 24, 2026 04:22 PM
ADDED : நவ 24, 2026 04:22 PM
காரைக்கால்: மூதாட்டியை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த தாய், மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்னர்.
காரைக்கால் தட்டார் தெருவைச் சேர்ந்தவர் ரெஜினா, 63; இவர் கடந்த 1989ம் ஆண்டு காரைக்காலைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் என்பவரிடம் நீலகிடங்கு வீதி, பெருமசாமி பிள்ளை வீதி சந்திப்பில் உள்ள இடத்தை கிரையம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த இடம் தொடர்பாக ஆனந்தகிருஷ்ணனின் மகன் வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் இரு தரப்பினருக்கும் சாதகமாக வெவ்வேறு நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெஜினா மேல்முறையீடு செய்தார்.
இதில் கடந்த 2025ம் ஆண்டு அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது இதையடுத்து ரெஜினா கடந்த 21ம் தேதி தனது மகன் பிரபுதாஸுடன் சென்று அந்த இடத்தை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியில்ஈடுபட்டார்.அப்போது அங்கு வந்த வெங்கடேஷ், தாய் சந்தானலட்சுமி மற்றும் நண்பர்கள் சிலர் அவர்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் நகர சப்.இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வெங்கடேஷ், இவரது தாய் சந்தானலட்சுமி ஆகிய மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
