/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களை முறைப்படுத்த மாதர் சங்கம் கோரிக்கை
/
மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களை முறைப்படுத்த மாதர் சங்கம் கோரிக்கை
மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களை முறைப்படுத்த மாதர் சங்கம் கோரிக்கை
மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களை முறைப்படுத்த மாதர் சங்கம் கோரிக்கை
ADDED : செப் 11, 2025 03:04 AM

புதுச்சேரி: மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களை வரைமுறைப்படுத்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து அகில இந்தியத் துணைத் தலைவர் சுதா கூறியதாவது:
புதுச்சேரியில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களால் தொடர்ந்து பெண்கள் மீது கடுமையான வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. நிதி நிறுவனங்கள் வரைமுறையின்றியும், எந்தவித கட்டுபாடும் இல்லாமல் 43 நிறுவனங்கள் இயங்குகிறது.
அந்த நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய பெண்களிடம் மாத தவணையை வசூலிக்கும் நபர்கள், ஒருநாள் தவறும் பட்சத்தில் அவர்களது வீட்டிற்கே சென்று தகாத வார்த்தைகளால் பேசி மனரீதியாக காயப்படுத்துகின்றனர். அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனால் சாதாரண குடும்ப பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சிலர் கடன் தொல்லையால் தற்கொலை முடிவுக்கும் செல்கின்றனர்.
எனவே, அரசு பொதுத்துறை வங்கிகள் மூலம் நேரடி பிணையமற்ற கடன்களை வழங்க உறுதி செய்ய வேண்டும்.
மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களின் வட்டி விகிதத்தை முறைபடுத்த வேண்டும். ரூ. 5 லட்சம் வரை கடன் வாங்குவதற்கு சிபில் கட்டாயமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க வேண்டும்' என்றார். மாநில தலைவி முனியம்மாள், மாநில செயலாளர் இளவரசி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.