ADDED : செப் 21, 2025 11:22 PM
பாகூர்: காணாமல் போன தாயை, கண்டு பிடித்து தரக்கோரி, மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கிருமாம்பாக்கம் அடுத்த ஈச்சங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன், 31; கட்டுமான தொழிலாளி.இவரது தாய் கலையரசி 50;. தனியார் சோப்பு கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 9ம் தேதி குமரேசன், தனது தாயிடம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து வைத்திருக்கும் படி கூறி உள்ளார். பின், கடந்த 15ம் தேதி, குமரேசன், அந்த பணத்தை கேட்டார்.
அதற்கு, கலையரசி எந்த பதிலும் கூறாமல் மவுனமாக இருந்ததால், குமரசேன் வெளியே சென்று விட்டார். பின், அன்று மாலை திரும்பி வந்து பார்த்து போது, வீட்டில் அவரது தாயை காணவில்லை.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து குமரேசன் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.