ADDED : ஜன 19, 2026 05:00 AM

நெட்டப்பாக்கம்: வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் சுற்றச்சூழலுக்கு உகந்த பூச்சி மேலாண்மை ஊக்குவித்தல் பயிற்சி கரையாம்புத்துார் உழவர் உதவியகத்தில் நடந்தது.
வேளாண் அலுவலர் புவனேஸ்வரி வரவேற்றார். முன்னோடி விவசாயி பூங்குன்றன் இயற்கை இடுபொருட்கள் தாயரிப்பு, மீன் அமிலம், கொம்பு சானம் உரம் குறித்து பேசினார். இயற்கை விவசாயி சேதுராமன் இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் அமிர்த கரைசல் குறித்து பேசினார்.
தொடர்ந்து சோலார் விளக்கு பொறி, மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி, நீள வண்ண ஒட்டுப்பொறி, ஒட்டுண்ணி அட்டை அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். இப்பயிற்சி முகாமில் கரையாம்புத்துார், பனையடிக்குப்பம், மணமேடு, கடுவனுார் பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.

