/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்சாலையில் மோட்டார் திருட்டு
/
தொழிற்சாலையில் மோட்டார் திருட்டு
ADDED : பிப் 18, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தனியார் கம்பெனியில் மோட்டார், ஒயர் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
துத்திப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் 44, இவர் அதே பகுதியில் இயங்கும் தனியார் கம்பெனி பாதுகாப்பு மேற்பார்வையாளர். கடந்த 14ம் தேதி காலை கம்பெனிக்கு சென்ற பாக்கியராஜ், மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டார் ஆன் செய்வதற்காக சென்றார். அங்கு ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மோட்டார், ஒயர், பேட்டரி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து பாக்கியராஜ் சேதராப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.