/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் திரியும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சாலையில் திரியும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் திரியும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் திரியும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 19, 2025 05:57 AM

புதுச்சேரி - விழுப்புரம் நெடுங்சாலையில், ஒவ்வொரு நிமிடமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதில், வில்லியனுார் பைபாஸ் விசாலமாக இருப்பதால் அப்பகுதியில் வளர்க்கப்படும் பசுமாடுகள், பன்றிகள் ஏராளமாக சுற்றித்திரிகின்றன.
காலை முதல் இரவு வரை 24 மணி நேரமும், போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சாலையை கடந்து செல்வதும், படுத்து ஓய்வு எடுப்பதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது.
இதில், பெரும்பாலும் பைக் ஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி விழுந்து காயமடைவதுடன், சில நேரம் உயிரிழப்புகள் கூட நிகழ்கிறது.
பைபாசில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவதுடன், அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.