தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு போலி சான்றிதழ் மீண்டும் வெடித்தது இரட்டை குடியுரிமை குற்றச்சாட்டு

எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு போலி சான்றிதழ் மீண்டும் வெடித்தது இரட்டை குடியுரிமை குற்றச்சாட்டு

எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு போலி சான்றிதழ் மீண்டும் வெடித்தது இரட்டை குடியுரிமை குற்றச்சாட்டு


ADDED : ஆக 21, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாணவர்களின் எம்.பி.பி.எஸ்., இடங்கமுக்கு பிற மாநில மாணவர்கள் போலி குடியுரிமை சான்றிதழ் கொடுத்து விண்ணப்பித்துள்ளதாக பெற்றோர் சங்கங்கள் திடுக் குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளன.

சென்டாக் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வில் பிற மாநில மாணவர்கள் இரட்டை குடியுரிமையுடன் புதுச்சேரி மாணவர்களின் மருத்துவ இடங்களை அபகரிக்க ஒவ்வொரு ஆண்டும் முயற்சி வருகின்றனர்.  இதற்காக போலி சான்றிதழ்களையும் சமர்ப்பிக்கின்றனர். இந்தாண்டும், இரட்டை குடியுரிமை பிரச்னை வெடித்தது.

30க்கும் மேற்பட்ட  மாணவர்கள் போலி சான்றிதழ்களை கொடுத்து புதுச்சேரி மாணவர்களின் சீட்டுகளை அபகரிக்க விண்ணப்பித்துள்ளதாக பெற்றோர், மாணவர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக கவர்னர், முதல்வர், தலைமைச் செயலாளர், கலெக்டர் மற்றும் சென்டாக் நிர்வாகத்திற்கு புதுச்சேரி மாநில மாணவர்கள் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சங்க தலைவர் பாலா கூறுகையில், ‘429 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு 6,023 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 32க்கும் மேற்பட்ட மாணவர்கள் போலி சான்றிதழ் கொடுத்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் அரசு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்து, அம்மாநில தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல் ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் புதுச்சேரி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 64 எம்.பி.பி.எஸ்., இடங்களைக் கைப்பற்ற, 30-க்கும் மேற்பட்ட வெளிமாநில மாணவர்கள் போலி ஆவணங்கள் மூலம் சென்டாக் வெளியிட்ட உத்தேச தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

எனவே கலெக்டர் தனியாக வருவாய்க் குழுவினை நியமித்து, விண்ணப்பித்துள்ள மாணவர்களின் அனைத்து ஆவணங்களையும் தீவிரமாகச் சரிபார்க்க வேண்டும். போலி ஆவணங்கள் மற்றும் இரட்டைப் பதிவில் ஈடுபட்டுள்ள மாணவர்களை நீக்கிவிட்டு, புதுச்சேரியை இருப்பிடமாகக் கொண்ட மண்ணின் மைந்தர்களின் பெயர்களை மட்டும் கொண்ட புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும்.

சுகாதாரத்துறை வெளியிட்ட நீட் தரவரிசைப் பட்டியலில் உள்ள வெளிமாநில மாணவர்களை நீக்கி, புதுச்சேரி மாணவர்களின் சரியான பட்டியலை ஜிப்மர் நிர்வாகத்திடம் ஒப்படைத்து அதன் அடிப்படையில் கலந்தாய்வை நடத்த வேண்டும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us