காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு தேசிய விருது
காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு தேசிய விருது
ADDED : ஆக 21, 2026 07:22 PM
புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு, தேசிய அளவில் தேர்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ், திருச்சியில் இயங்கி வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தனது 33வது ஆண்டு விழா மற்றும் உழவர்களின் விழா நேற்று கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் தேசிய அளவில் வாழை ஆராய்ச்சி நிலையத்தின் தொழில் நுட்பங்கள் ஆன திசு வளர்ப்பு, வாழை உற்பத்தி, உயிரியல் கட்டுப்பாட்டுகளின் இடுபொருட்கள், இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள், வாழையில் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை சிறந்த முறையில் பரிமாற்றம் செய்ததற்கான, புதுச்சேரி குருமாம்பட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த அறிவியல் நிலையத்திற்கு தேசிய அளவில் சிறந்த விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதிணை காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி பெற்றுக் கொண்டார். தொழில்நுட்ப வல்லுனர்கள் உடனிருந்தனர்.
