தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எம்.பி.பி.எஸ்., மூன்றாம் கட்ட கலந்தாய்வு சீட் ஒதுக்கீடு பட்டியல் இன்று வெளியீடு

எம்.பி.பி.எஸ்., மூன்றாம் கட்ட கலந்தாய்வு சீட் ஒதுக்கீடு பட்டியல் இன்று வெளியீடு

எம்.பி.பி.எஸ்., மூன்றாம் கட்ட கலந்தாய்வு சீட் ஒதுக்கீடு பட்டியல் இன்று வெளியீடு


UPDATED : அக் 10, 2026 02:41 AM

ADDED : அக் 10, 2026 02:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 02:41 AM ADDED : அக் 10, 2026 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட சீட் ஒதுக்கீடு பட்டியலை சென்டாக் நிர்வாகம் இன்று வெளியிடுகிறது.

நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளுக்கு சென்டாக் சார்பில், இதுவரை இரண்டு கட்டக் கலந்தாய்வுகள் முடிந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கான வரைவுப் பட்டியல் கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்டு, நேற்று காலை 11:00 மணி வரை ஆட்சேபனைகள் பெறப்பட்டன.

மாணவர்களின் ஆட்சேபனைகளைப் பரிசீலனை செய்த சென்டாக், இன்று இறுதிச் சீட் ஒதுக்கீட்டுப் பட்டியலை வெளியிடுகிறது.

இதில் இடம் பெறும் மாணவர்கள் வரும் 12ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்து தங்களது சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.

அகில இந்திய இடங்கள் நீக்கம்



நாடு முழுதுமுள்ள மருத்துவக் கலந்தாய்வு தொடர்பாக மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு நேற்று ஆன்லைனில் ஆலோசனை நடத்தியது. இதன்படி, எம்.சி.சி., கலந்தாய்வு மூலம் ஏற்கெனவே மருத்துவ இடங்களில் சேர்ந்த மாணவர்களின் பட்டியல் இன்று காலை 10:00 மணிக்கு சென்டாக்கிற்கு வழங்கப்பட உள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவர்கள் மாநிலக் கலந்தாய்வுப் பட்டியலில் தொடர்வதை தவிர்க்கும் வகையில், அந்த மாணவர்களின் பெயர்களைச் சென்டாக் தனது பட்டியலிலிருந்து நீக்கம் செய்யவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us