ADDED : அக் 10, 2026 02:37 AM
புதுச்சேரி: பிரதமர் மோடியின் இலவச அரிசிக்கான டிஜிட்டல் கரன்சி பெறும் பயனாளிகளுக்கு, ரேஷன் கடைகளில் இன்று 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை ‘வைட் லிஸ்டிங்’ சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டுகளில் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் 2 லட்சம் ரேஷன் கார்டுகளில், 1.5 லட்சம் ரேஷன் கார்டுகள், டிஜிட்டல் கரன்சி பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது பயனாளி புதுச்சேரியில் வசிப்பதை ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலம் உறுதி செய்து அத்திட்டத்தில் இணைப்பர். அதற்காக ஏராளமான சிறப்பு முகாம் அமைத்து வைட் லிஸ்டிங் செய்யப்பட்டது.
தற்போது இத்திட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை விடுப்பட்ட 45 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு வங்கி கணக்கு மூலம் அரிசிக்கான பணம் அனுப்பட்டது.
செப்ட ம்பர் மாதம் முதல் டிஜிட்டல் கரன்சி நிறுத்தப்பட உள்ளதால், விடுப்பட்ட 45 ஆயிரம் ரேஷன் கார்டுகளையும், வைட் லிஸ்டிங் செய்வதிற்கான சிறப்பு முகாம் இன்று 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை அந்தந்த ரேஷன் கடைகளில் நடக்கவுள்ளது.
வைட் லிஸ்டிங் செய்வதிற் கு, தங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட ரேஷன் கடையில் நடக்கும் முகாமிற்கு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல்போன் கொண்டு செல்ல வேண்டும் என, குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
