தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.பி.ஏ., விருந்தோம்பல் மேலாண்மை படிப்பு புதுச்சேரி பல்கலையில் துவக்கம்

 எம்.பி.ஏ., விருந்தோம்பல் மேலாண்மை படிப்பு புதுச்சேரி பல்கலையில் துவக்கம்

 எம்.பி.ஏ., விருந்தோம்பல் மேலாண்மை படிப்பு புதுச்சேரி பல்கலையில் துவக்கம்


ADDED : ஆக 18, 2026 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 03:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிதாக எம்.பி.ஏ., விருந்தோம்பல் மேலாண்மை பாடப்பிரிவு துவக்கி வைக்கப்பட்டது.

சுற்றுலாத் துறை தலைவர் சிபி வரவேற்றார். பண்பாடு மற்றும் கலாசார உறவுகள் பிரிவின் இயக்குநர் நடராஜன் தலைமை தாங்கினார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரகாஷ் பாபு புதிய படிப்பைத் துவக்கி வைத்து பேசியதாவது:

உலகம் முழுவதுமே விருந்தோம்பல் துறை வல்லுனர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு, இப்பாடப்பிரிவை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பிற வளாகங்களிலும் துவங்குவதற்கு ஆர்வம் உள்ளது.

மேலாண்மையியல் கல்வியை நடைமுறை சார்ந்த விருந்தோம்பல் பயிற்சிகளுடனும் நேரடி தொழில் அனுபவத்துடனும் இணைக் கும் வகையில் இப்புதிய எம்.பி.ஏ., பாடப்பிரிவு வடிவமைக்கப்பட் டுள்ளது.

இது மாணவர்கள் விருந்தோம்பல் மற்றும் சேவைத் துறைகளில் மேலாண்மை சார்ந்த உயர் பதவிகளை அடைய வழிவகுக்கும்.

இவ்வாறு துணைவேந்தர் பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக ராடிசன் ரிசார்ட் புதுச்சேரி பே அமைப்பின் சீனியர் பொது மேலாளர் உமா மகேஸ்வரி, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் துணைப் பொது மேலாளர் ஆஷா குப்தா கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், வேகமாக வளர்ந்து வரும் விருந்தோம்பல் துறைக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தும் குறித்து சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துரையாடி, விளக்கம் அளித்தனர்.

மாணவர்கள் நல முதன்மையர் வெங்கட ராவ், பேராசிரியர் சம்பத் குமார் சுவைன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

சுற்று லாத் துறை இணைப் பேராசிரியர் ஷெர்ரி ஆபிரகாம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us