/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெற்றிகரமான ராணுவ தாக்குதல் செல்வகணபதி எம்.பி., பாராட்டு
/
வெற்றிகரமான ராணுவ தாக்குதல் செல்வகணபதி எம்.பி., பாராட்டு
வெற்றிகரமான ராணுவ தாக்குதல் செல்வகணபதி எம்.பி., பாராட்டு
வெற்றிகரமான ராணுவ தாக்குதல் செல்வகணபதி எம்.பி., பாராட்டு
ADDED : மே 09, 2025 12:12 AM
புதுச்சேரி: பயங்கரவாதத்திற்கு எதிரான வான்வழி தாக்குதலை வெற்றிக்கரமாக முடித்த பிரதமர் மற்றும் ராணுவத்திற்கு பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். அங்கிருந்த பெண்களிடம் மோடியிடம் போய் சொல் என பயங்கரவாதிகள் கேலி பேசினார். இதையடுத்து, பிரதமர் முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்து கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை ராணுவம் மூலம் வேட்டையாடி முடித்திருக்கிறார். மோடியிடம் போய் சொன்னால் என்னாகும் என்பது இப்போது புரிந்திருக்கும்.
பாகிஸ்தான் கதறல் சத்தம் கேட்டு கொண்டு இருகிறது. மத்திய அரசுக்கு பின்னால் ஒவ்வொரு இந்தியரும் ஒற்றுமையுடன் அணிவகுத்து, ராணுவத்தின் தாக்குதலுக்கு வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் கண்காணிப்பில் இந்திய ராணுவம் வான்வழி தாக்குதல் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்க்குரலை மீண்டும் உயர்த்தி பிடித்திருக்கிறது.
இதற்காக, பிரதமர் மோடிக்கும், துல்லிய தாக்குதல் நடத்திய ராணுவத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்து மகிழ்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

