/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழையால் பாதித்த புதுச்சேரிக்கு சிறப்பு நிதி செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தல்
/
மழையால் பாதித்த புதுச்சேரிக்கு சிறப்பு நிதி செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தல்
மழையால் பாதித்த புதுச்சேரிக்கு சிறப்பு நிதி செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தல்
மழையால் பாதித்த புதுச்சேரிக்கு சிறப்பு நிதி செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தல்
ADDED : டிச 18, 2025 05:07 AM
புதுச்சேரி: கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என, செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தினார்.
அவர், ராஜ்ய சபாவில்பேசியதாவது:
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்த ஆண்டு கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது மீனவர்கள் மற்றும் விவசாயிகள் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட சமூகங்களைப் பாதித்துள்ளது.
மீனவர்களால் வாரக்கணக்கில் கடலுக்குச் செல்ல முடியவில்லை. இது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கடற்கரை 50 மீட்டர் அளவுக்கு அரிக்கப்பட்டுள்ளது. புயல்களின் போது ஏற்படும் ராட்சத அலைகள் மீனவர்களின் பெரும்பாலான கடலோர வாழ்விடங்களை மூழ்கடித்துவிட்டன.
பலர் வீடுகளை இழந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். புதுச்சேரியின் 25 கி.மீ., நீளமுள்ள கடற்கரையைப் பாதுகாக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால் நிதிப் பற்றாக்குறையால் அவற்றை முடிக்க முடியவில்லை.
இந்த ஆண்டும், நவம்பர் 25ம் தேதி, டிட்வா' புயலின் மந்தமான மற்றும் மெதுவான நகர்வு காரணமாக கனமழை பெய்தது. இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 12,000 எக்டர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.
அரசு நிதி உதவியுடன் தங்களைக் காப்பாற்ற வரும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், புதுச்சேரி அரசு ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.
எனவே,போர்க்கால அடிப்படையில் புதுச்சேரி அரசுக்கு சிறப்பு நிதியை நிவாரணமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

