/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை பணிகளுக்கு ரூ.55 லட்சம் வைத்திலிங்கம் எம்.பி., ஒதுக்கீடு
/
சாலை பணிகளுக்கு ரூ.55 லட்சம் வைத்திலிங்கம் எம்.பி., ஒதுக்கீடு
சாலை பணிகளுக்கு ரூ.55 லட்சம் வைத்திலிங்கம் எம்.பி., ஒதுக்கீடு
சாலை பணிகளுக்கு ரூ.55 லட்சம் வைத்திலிங்கம் எம்.பி., ஒதுக்கீடு
ADDED : அக் 27, 2024 03:48 AM

புதுச்சேரி : உழவர்கரை தொகுதியில் சாலை பணிகளுக்கு, ரூ.55 லட்சத்தை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வைத்திலிங்கம் எம்.பி., ஒதுக்கீடு செய்தார்.
புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ஜான் குமார் நகர் மற்றும் விரிவாக்கம், சீனிவாசன் நகர் மற்றும் ஏ.கே.டி. நகர் பகுதிகளின் உட்புற சாலைகள் மற்றும் மோதிலால் நகர் செல்லும் சாலையை அமைக்க முன்னாள் துணை சபாநாயகர் பாலன் வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.44.20 லட்சம், ஒதுக்கீடு செய்து, அதற்கான கடிதத்தை வழங்கினார்.
மேலும் முத்துப்பிள்ளை பாளையம், பாலாஜி நகர், ஞானசம்மந்தம் நகர் ஆகிய பகுதிகளின் உட்புற சாலைகளை அமைக்க ரூ.10.48 லட்சத்தை, வைத்திலிங்கம் எம்.பி., நேற்று ஒதுக்கீடு செய்தார்.
மொத்தத்தில், சாலை பணிகளுக்கு ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.