/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்
/
பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்
பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்
பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்
ADDED : ஜன 04, 2025 04:47 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என, காங்., மாநில வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
அவர், கூறியதாவது;
புதுச்சேரியில் பஸ் கட்டணம், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு அரசு புத்தாண்டு பரிசாக வழங்கியுள்ளது. நிவாரணமாக ரூ. 5,000 வழங்கிவிட்டு, அதனை கட்டண உயர்வு மூலம் மக்கள் திரும்ப தரக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. ரூ.645 கோடி மழை நிவாரணம் கேட்கப்பட்டது. மத்திய குழு வந்து பார்வையிட்டு, அறிவிப்பதாக தெரிவித்தனர். எந்தவித நிவாரண தொகையும் இதுவரையில் வழங்கவில்லை.
மத்திய அரசுடன் இணக்கமாக சென்று மக்களுக்கு தேவையான நிதியை பெறுவர் என மக்கள் ஓட்டு அளித்தனர். அதற்கான எந்தவித முயற்சியும், எடுக்காமல் முதல்வர் மவுனமாக இருந்து வருகிறார்.
பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி உயர்வினை வாபஸ் பெறவும், பஸ் கட்டணத்தை குறைக்கவும் வேண்டும். இல்லையெனில் காங்., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு ரூ. 750 வழங்கப்படும் என்ற அறிவிப்பு போதுமானதாக தெரியவில்லை, தற்போதைய விலைவாசியை ஏற்ற வகையில் ரூ. 2,000 வழங்க வேண்டும்.
ஹெல்மெட் அவசியம் தான், படிப்படியாக அமல்படுத்த வேண்டும். தொழிலதிபர் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது குறித்த கேள்விக்கு, இலவசம் மட்டுமே அரசியல் கிடையாது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள் அந்த நபர் இங்கு இருப்பாரா என்பது கேள்விதான்.
புயல் நிவாரணம் தொடர்பான இருமுறை பாராளுமன்றத்தில் பேசி உள்ளேன். மாநில வளர்ச்சி தொடர்பாக முதல்வர் அழைப்பு கொடுத்தால் சென்று சந்தித்து பேசுவதற்கு தயார்' என்றார்.

