/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பனாறு வாய்க்காலை துார்வார எம்.பி., அறிவுறுத்தல்
/
உப்பனாறு வாய்க்காலை துார்வார எம்.பி., அறிவுறுத்தல்
உப்பனாறு வாய்க்காலை துார்வார எம்.பி., அறிவுறுத்தல்
உப்பனாறு வாய்க்காலை துார்வார எம்.பி., அறிவுறுத்தல்
ADDED : அக் 01, 2025 06:37 AM

புதுச்சேரி : உப்பனாறு வாய்க்காலை உடனடியாக துார்வாரிட அதிகாரிகளை வைத்திலிங் கம் எம்.பி., அறிவுறுத்தினார்.
பாலாஜி தியேட்டர் அருகில் உள்ள உப்பனாறு பெரிய வாய்க் கால் மேம் பாலம் கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. வாய்க்கால் துார் வாராத நிலையில், மழைக் காலம் துவங்க உள்ளதால், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், காமராஜ் நகர், ஜீவா நகர், பிருந்ததவனம், தென்றல் நகர் மக்கள் வெள்ள அபாயத்தில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் நலவாழ்வு சங்கத்தினர் வைத்திலிங்கம் எம்.பி.யை சந்தித்து முறையிட்டனர். அதன்பேரில், நேற்று உப்பனாறு பெரிய வாய்க்காலை ஆய்வு செய்த வைத்திலிங்கம் எம்.பி., பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம், உடனடியாக வாய்க்காலை துார்வார அறிவுறுத்தினார். ஆய்வின்போது, காமராஜர் நகர் தொகுதி காங்., பொறுப்பாளர் தேவதாஸ் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.