ADDED : மார் 27, 2025 03:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மாணவியர், தயாரித்த, பல நாடுகளின் உணவு வகைகள் கண்காட்சியில் இடப்பெற்றன.
கல்லுாரியில் மனையியல் துறை முதலாம் ஆண்டு பயிலும், மாணவிகள், பிரான்ஸ், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை தயார் செய்து, கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு வைத்திருந்தனர். இந்த கண்காட்சியை கல்லுாரி இயக்குனர் செல்வராஜ் துவக்கி வைத்து, பார்வையிட்டார். பேராசிரியர் அலமேலு மங்கை துவக்க உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில்,பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் சன்னோலியன் நன்றி கூறினார்.