/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நேரு வீதி கடைகளில் நகராட்சி ஆணையர் ஆய்வு
/
நேரு வீதி கடைகளில் நகராட்சி ஆணையர் ஆய்வு
ADDED : அக் 11, 2024 06:06 AM

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி எல்லைக்குட்பட்ட நேரு வீதியில் நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில், நகராட்சி சுகாதார அதிகாரி ஆர்த்தி, வருவாய் அதிகாரி பிரபாகரன், அறிவியல் மற்றும் சுற்றுசூழல் துறை இளநிலை பொறியாளர் இளங்கோ, சுகாதார இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, கட்டுப்பாட்டாளர் லட்சுமணன், சுகாதார ஆய்வாளர் பாண்டியன், நகராட்சி ஊழியர்கள் நேரு வீதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் 19 கடையில் விற்ற 100 கிலோ நெகிழி பொருட்களை ஊழியர்கள் பறிமுதல் செய்து, ரூ.6,400 ரூபாய் அபாரதம் வசூலித்தனர். மேலும் நேரு வீதி, மணக்குள விநயாகர் கோயில் வீதி, செஞ்சிசாலை நடைபாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளகடை காரர்களுக்கு பொது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் வியாபாரம் செய்ய வேண்டும், மீறினால்கடைகள் அப்புறப்படுத்தப்படும் என எச்சரித்தனர்.