/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையர்கள் எச்சரிக்கை
/
பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையர்கள் எச்சரிக்கை
பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையர்கள் எச்சரிக்கை
பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையர்கள் எச்சரிக்கை
ADDED : நவ 29, 2024 04:14 AM
புதுச்சேரி: பொதுவெளியில் பேனர், விளம்பர பதாகைகள் வைத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர்கள் எச்சரித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் புதுச்சேரிக்கு விடுத்துள்ள புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக நகராட்சி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுவெளியில் வியாபார நோக்கத்துடன் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர பதாகைகள் போன்றவை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
அறிவிப்பை மீறி பேனர், விளம்பர பதாகைகள்வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதை மீறி வியாபார நோக்கத்துடன் வைக்கப்படும் பதாகைகள், அபாயகரமான விளம்பர பதாகைகள் போன்றவற்றால், அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கிரிமினல் வழக்கு பதிய காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.