ADDED : ஆக 08, 2025 09:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; புதுச்சேரியில், மத்திய அரசை கண்டித்து மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காமராஜர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலியமூர்த்தி, பிரபுராஜ், சத்தியா, நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு, உழவர்கரை நகர செயலாளர் ராம்ஜி உட்பட பலர் பங்கேற்றனர்.
மூத்த தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், பெருமாள், தமிழ்ச்செல்வன், சீனுவாசன், கொளஞ்சியப்பன் ஆகியோர், வாக்காளர் பட்டியலில் 'தீவிர சிறப்பு திருத்தம்' பெயரில் மத்திய அரசின் ஜனநாயக விரோத அரசியலை கண்டித்து பேசினர்.

