/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி வழங்க கோரி நகராட்சி முற்றுகை
/
பணி வழங்க கோரி நகராட்சி முற்றுகை
ADDED : டிச 13, 2025 05:21 AM

புதுச்சேரி: அனைவருக்கும் பணி வழங்க கோரி, புதுச்சேரி நகராட்சியை வாரிசுதாரர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற, நகராட்சி ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் சங்க செயலாளர் வேளாங்கண்ணி தாசன் கூறுகையில், 'புதுச்சேரி நகராட்சியில் பணியாற்றி இறந்து போன ஊழியர்களின் வாரிசுகள் 2007 முதல் கருணை அடிப்படையில் பணி நியமனம் நடைபெறவில்லை.
தற்போது வாரிசுகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி பணி நியமனம் மேற்கொள்ள அரசு கூறியுள்ளது. அதன்படி, 20 பேருக்கு மட்டுமே பணி நியமனம் கிடைக்கும்.
தற்போது 127 வாரிசுதாரர்கள் உள்ளனர். அரசின் காலதாமதத்தால் 18 ஆண்டுகளில் பணி நியமனம் நடைபெறாததால் பலருக்கு வயது மூப்பும் ஏற்பட்டு விட்டது.
இவர்களுக்கும் வயதில் தளர்வு அளிக்கவும் மற்றும் அனைவருக்கும் பணி நியமனம் செய்யக்கோரி நகராட்சி ஆணையர் கந்தசாமியை சந்தித்து பேசினோம்.
தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினோம். அவர், பரிசீலிப்பதாக கூறியுள்ளார்' என்றார்.

