தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மர்டர் மணிகண்டன் இணைப்பு

மர்டர் மணிகண்டன் இணைப்பு

மர்டர் மணிகண்டன் இணைப்பு


UPDATED : நவ 28, 2026 04:24 AM

ADDED : நவ 28, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 04:24 AM ADDED : நவ 28, 2026 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பலத்த போலீஸ் பாதுகாப்பு: கடந்த 2012 ஆகஸ்ட் மாதம் புதுச்சேரி நீதிமன்றத்தில் இருந்து தேங்காய்திட்டு ஜெகன், காரைக்கால் சிறைக்கு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டார். அரியாங்குப்பம் பாலத்தில் மர்டர் மணிகண்டனின் ஆட்கள் நாட்டு வெடிகுண்டு வீசி ஜெகனை கொலை செய்தனர்.

இக்கொலைக்கு பழி வாங்க மர்டர் மணிகண்டனை கொலை செய்ய ஜெகனின் ஆதர வாளர்கள் திட்டமிட்டனர். புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் 2013 ஆகஸ்ட் மாதம் ஏனாம் சென்று அங்குள்ள லாட்ஜில் தங்கி, 2013 ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி அதிகாலை இக்கும்பல் இரண்டு ஏணிகளை பயன்படுத்தி, ஏனாம் சிறை சுவரில் ஏறி சிறைக்குள் நுழைந்தனர்.

ஏனாம் எஸ்.பி., புருஷோத்தமன் தலைமையிலான போலீசார், அக்கும்பலை துரத்திச் சென்று பிடித்த சிறையில் அடைத்தனர். இவ்வழிக்கில், 18 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மர்டன் மணிகண்டனை கொலை செய்யும் திட்டம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருவதால் ஏனாம் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us