UPDATED : நவ 27, 2026 09:38 PM
ADDED : நவ 27, 2026 09:36 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ஒத்தவாடை தெருவில் மின் கம்பங்கள் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்து 3 மாதங்களாகியும் பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன.
இங்கு, சாக்கடை நீரில் மின் கம்பிகள் செல்வதால் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு அபாயம் உள்ளது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே மின்துறை அதிகாரிகள், பாதுகாப்பற்ற முறையில் உள்ள மின் இணைப்புகளை சரி செய்து, பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
