ADDED : செப் 20, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: மறைந்த இசைக் கலைஞர் காரை சுப்பையாவிற்கு காரைக்காலில் அரசு மரியாதையுடன் 21 குண்டு முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
காரைக்காலைச் சேர்ந்த இசைக்கலைஞரும் கலைமாமணி மற்றும் தேசிய அமிர்தம் விருது பெற்றவருமான காரை சுப்பையா, 80, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார்.
அவரது கலை சேவையை கவுரவிக்கும் வகையில், அவரது இறுதிச்சடங்கை மாநில அரசு மரியாதையுடன் நடத்தது.
அதன்படி நேற்று காலை காரை சப்பையாவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டு, பச்சூர் இடுகாட்டில் அவரது உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் துணை ஆட்சியர் பக்கிரிசாமி தலைமையில் மரியாதை செய்யப்பட்டது. நகர சப் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் 21 குண்டு முழங்க இறுதிச்சடங்கு அவருக்கு செய்யப்பட்டது. பின், அவரது உடல் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
