தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்தலாம்மன் கோவில் தேர் திருவிழா

முத்தலாம்மன் கோவில் தேர் திருவிழா

முத்தலாம்மன் கோவில் தேர் திருவிழா


ADDED : ஆக 28, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவிலில் 76ம் ஆண்டு  செடல் மற்றும் தேர்திருவிழா நேற்று நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் முத்தலாம்மன் கோவில் செடல் மற்றும் தேர் திருவிழா கடந்த 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் இரவு வீதியுலா நடந்து வந்தது.

முக்கிய நிகழ்வான தேர்திருவிழா நேற்று காலை நடந்தது. விழாவில் அமைச்சர் ராஜவேலு, ஆறுமுகம் எம்.எல்.ஏ., ஆகியோர் தேரினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி அமர்நாத், விழாக்குழு கமிட்டி தலைவர் விஸ்வநாதன் மற்றும்  கிராம மக்கள் செய்திருந்தனர் 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us