/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்துப்பிள்ளைபாளையம் கோவில் கும்பாபிஷேகம்
/
முத்துப்பிள்ளைபாளையம் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 11, 2025 06:21 AM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே முத்துப்பிள்ளைபாளையம் பொன்னி முத்துமாரியம்மன் கோவில் மற்றும் அதனுடன் அமைந்துள்ள முத்துவிநாயகர், அழகு முத்து ஐயனார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
பூஜைகள் கடந்த 8ம் தேதி துவங்கி நடந்து வந்தது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து, 9:00 மணியளவில் கலசம் புறப்பாடும், 9:30 மணியளவில் புதிய ராஜகோபுரம்கும்பாபிஷேகம், 9:45 மணியளவில் முத்துவிநாயகர் உள்ளிட்ட பரிவார ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம், 10:10 மணியளவில் பொன்னிமுத்து மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம், தீபராதனை நடந்தது.
விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, சிவசங்கரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், பா.ஜ. மாநில செயலாளர் சரவணன், என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

