sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'எனது பில் எனது உரிமை திட்டம்' 158 பேருக்கு ரூ. 55.40 லட்சம் பரிசு

/

'எனது பில் எனது உரிமை திட்டம்' 158 பேருக்கு ரூ. 55.40 லட்சம் பரிசு

'எனது பில் எனது உரிமை திட்டம்' 158 பேருக்கு ரூ. 55.40 லட்சம் பரிசு

'எனது பில் எனது உரிமை திட்டம்' 158 பேருக்கு ரூ. 55.40 லட்சம் பரிசு


ADDED : ஜன 31, 2024 02:04 AM

Google News

ADDED : ஜன 31, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : எனது பில் எனது உரிமை திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் இதுவரை 158 பேர் மொத்தம் ரூ. 55.40 லட்சம் பரிசு பெற்றுள்ளனர்.

புதுச்சேரி ஜி.எஸ்.டி. ஆணையர் பத்மஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;

மத்திய அரசு பொதுமக்கள் வர்த்தக நிறுவனங்களில் வாங்கும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி.,பில்களைக் கேட்டு பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், 'எனது பில் எனது உரிமை' எனும் பரிசு திட்டத்தை கடந்த செப்., 1ம் தேதி துவக்கியது. இத்திட்டம் தற்போதைய வடிவத்தில் இன்று 31ம் தேதியுடன் முடிவு பெறுகிறது.

நுகர்வோர், தாங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவைக்கான ஜி.எஸ்.டி.,பில்களை, 'Mera Bill Mera Adhikaar' எனும் மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்தனர். கடந்த செப்., முதல் ஒவ்வொரு மாத முடிவிலும் அரியானா, அசாம், குஜராத், யூனியன் பிரதேசங்களான தாத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூர், புதுச்சேரி மாநில பில்களில் கம்ப்யூட்டர் மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இத்திட்டம் குறித்து மத்திய கலால் ஆணையரகம் மற்றும் ஜி.எஸ்.டி., சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஊர்வலம், விளம்பரம், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

நேற்று 30ம் தேதியுடன் மொபைல் செயலி வழியாக மொத்தம் 7,89,800 பில்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச பில்களை குஜராத்தை தொடர்ந்து, அரியானா, அசாம், புதுச்சேரி பதிவேற்றம் செய்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த டிசம்பருடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் பதிவேற்றம் குறைந்துள்ளது. கடந்த செப்., மாதம் 12,974 ஆக இருந்த எண்ணிக்கை, ஜனவரி மாதத்தில் நேற்று வரை 6,143 ஆக குறைந்துள்ளது.

புதுச்சேரியில் மொத்தம் 154 வெற்றியாளர்கள் தலா ரூ. 10 ஆயிரம் பரிசு தொகை வென்றுள்ளனர். 4 பேர் தலா ரூ. 10 லட்சம் அதிர்ஷ்ட பரிசு பெற்றுள்ளனர். முதல் காலாண்டில் தலா ரூ. 1 கோடி பரிசு பெற்ற 2 வெற்றியாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர்.

இந்த காலாண்டிற்கான திட்டம் இன்றுடன் முடிவடைகிறது. முதல் காலாண்டிற்கான பம்பர் பரிசு இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜனவரி மாதத்திற்கான இறுதி குலுக்கல் இன்று நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us