/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது தான் எனது விருப்பம்' கவர்னர் தமிழிசை 'பளீச்'
/
'மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது தான் எனது விருப்பம்' கவர்னர் தமிழிசை 'பளீச்'
'மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது தான் எனது விருப்பம்' கவர்னர் தமிழிசை 'பளீச்'
'மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது தான் எனது விருப்பம்' கவர்னர் தமிழிசை 'பளீச்'
ADDED : பிப் 22, 2024 06:47 AM

புதுச்சேரி, : 'கவர்னராக மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என் உள்ளார்ந்த விருப்பம் மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது தான்' என, கவர்னர் தமிழிசை கூறினார்.
புதுச்சேரி கவர்னராக தமிழிசை பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதை முன்னிட்டு, கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மூன்று ஆண்டு சாதனை புத்தகத்தை கவர்னர் தமிழிசை வெளியிட்டார். நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் சரத் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின், அவர் அளித்த பேட்டி:
புதுச்சேரி கவர்னராக நான் பொறுப்பேற்றபோது, கொரோனா உச்சத்தில் இருந்தது. அப்போது, புதுச்சேரியில் நடந்த கொரோனா தடுப்பு பணிகள் இந்தியா முழுதும் பாராட்டப்பட்டது. அரசியல்வாதியாக இருந்து கவர்னராக வந்ததால், எதிர் கருத்துக்கு பதில் தருவது வழக்கம்.
என்னுடையது சுமூகமான பயணமல்ல. நேரடி வாரிசாக அப்பாவுடன் பயணித்திருந்தால் பயணம் எளிதாக இருந்திருக்கும். எதிர் இயக்கத்தில் சேர்ந்து என்னை நானே உயர்த்திக் கொண்டேன்.
தற்போது மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என் உள்ளார்ந்த விருப்பம் மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது. அது, ஆண்டவரிடமும், ஆண்டு கொண்டிருப்பவரிடமும் உள்ளது.
அவர்கள் வழிகாட்ட வேண்டும். அவர்கள் உத்தரவை செயல்படுத்தும், கீழ்படியும் காரியகர்த்தா நான்.
நான் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன் என்றோ, அதிலும் புதுச்சேரியில் போட்டியிடுவேன் என்றோ வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.
ஆனால், உடனடியாக நான் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என்கின்றனர். இது, தாய்வழி மண். அரவிந்தர், பாரதி ஆகியோர் இங்கு வந்து வாழ்ந்த மண். அதனால், வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என்று என்னை குறிப்பிடாதீர்கள்.
புதுச்சேரியை வேறு மாநிலமாக நான் ஒரு நிமிடம்கூட பார்த்ததில்லை. என் தமிழ் பேசும் மக்கள் இங்குள்ளனர். வேறு மாநிலம் என்ற அடையாளத்தை தர வேண்டாம். ஒரு சகோதரியாகத் தான் பணியாற்றுகிறேன். அதனால், வேறு மாநிலம் என வேறுபடுத்தாதீர்கள். அது, மனவலி தருகிறது.
எனக்கு வருகின்ற வழிகாட்டுதல்படி செயல்படுவேன். நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள். நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்துங்கள். புதுச்சேரியில் எதுவாக தொடர விரும்புகிறீர்கள் என கேட்கிறீர்கள்.
நான் புதுச்சேரியில் இப்போது கவர்னராக பணியாற்றி வருகிறேன். கவர்னர் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தி.மு.க., தெரிவித்துள்ளது குறித்து கேட்கிறீர்கள். நான் சொத்து சேர்க்கவில்லை, எனது கோட்டும் ஒயிட்; நோட்டும் ஒயிட். இவ்வாறு, அவர் கூறினார்.