/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மர்ம விலங்கு நடமாட்டம்? கண்காணிக்க கேமரா
/
மர்ம விலங்கு நடமாட்டம்? கண்காணிக்க கேமரா
ADDED : டிச 22, 2024 07:00 AM
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதை அறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த கோட்டப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்ரவர்த்தி, 47; இவரது கொட்டகையில் கட்டியிருந்த கன்றுகுட்டியை, கடந்த 15ம் தேதி இரவு மர்ம விலங்கு கடித்து இழுத்து சென்று அருகிலிருந்த மலை மீது போட்டு சென்றது.
சிறுத்தை அல்லது கழுதைபுலி இழுத்துச் சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். அதையடுத்து செஞ்சி வனத்துறையினர் மலை மற்றும் சுற்றுப்பகுதியில் இரண்டு இடங்களில் 18ம் தேதி, கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர். இது வரை கேமராவில் எந்த மர்ம விலங்கின் நடமாட்டமும் பதிவாகவில்லை.