/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காஞ்சி மாமுனிவர் மையத்திற்கு 'நாக ் ' கமிட்டி வருகை ஐந்தாண்டு கால செயல்பாடுகள் மதிப்பீடு
/
காஞ்சி மாமுனிவர் மையத்திற்கு 'நாக ் ' கமிட்டி வருகை ஐந்தாண்டு கால செயல்பாடுகள் மதிப்பீடு
காஞ்சி மாமுனிவர் மையத்திற்கு 'நாக ் ' கமிட்டி வருகை ஐந்தாண்டு கால செயல்பாடுகள் மதிப்பீடு
காஞ்சி மாமுனிவர் மையத்திற்கு 'நாக ் ' கமிட்டி வருகை ஐந்தாண்டு கால செயல்பாடுகள் மதிப்பீடு
ADDED : நவ 05, 2024 06:40 AM

புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திற்கு வருகை தந்த நாக் கமிட்டியினர் கல்லுாரியின் ஐந்தாண்டு கால செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பு பெற்றுள்ள காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில், கலை, மனிதநேயம், வணிகம் மற்றும் அறிவியல் துறைகளில் 16 முதுநிலை படிப்புகளும், 8 பி.எச்.டி., படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
இக்கல்லுாரியை ஆய்வு செய்ய முனைவர் கருணேஷ் சேக்சேனா தலைமையில், முனைவர்கள் அப்துல் வகிட் ஹஸ்மேனி, அல்கா பீஸ் மூவர் அடங்கிய நாக் கமிட்டி அமைக்கப்பட்டது.
இக்கமிட்டி நேற்று காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திற்கு வருகை தந்தது. கமிட்டியை கல்லுாரி இயக்குனர் செல்வராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து பல்வேறு துறைகளை சுற்றி பார்த்த கமிட்டியினர் கல்லுாரியின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்லுாரியின் செயல்பாடுகள் அனைத்தும் அறிக்கையாக சமர்பித்து, விவாதிக்கப்பட்டது.ஒவ்வொரு துறைகளையும் மதிப்பீடு செய்த நாக் கமிட்டினர், முன்னாள் மாணவர் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினர். இரண்டாவது நாளாக இன்றும் நாக் கமிட்டி முகாமிட்டு, கல்லுாரியை ஆய்வு செய்ய உள்ளனர்.
காஞ்சிமாமுனிவர் கல்லுாரியில் கடந்த 2005ம் ஆண்டு நடந்த நாக் கமிட்டியின் முதலாவது ஆய்வில் பி.பிளஸ்,பிளஸ் கிரேடு சான்றிதழ் வழங்கி பாராட்டியது. அடுத்து 2013ம் ஆண்டு நடந்த இரண்டாவது நாக் கமிட்டி ஆய்வின்போது கல்லுாரிக்கு ஏ கிரேடு சான்றிதழ் கொடுத்து மகுடம் சூட்டியது. கடந்த 2019 ம் ஆண்டு நடந்த மூன்றாவது நாக் கமிட்டி ஆய்வில் மீண்டும் பி.பிளஸ்,பிளஸ் கிரேடு சான்றிதழ் வழங்கி பாராட்டியது குறிப்பிடதக்கது.