sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 இளைஞர்களுக்கு அதிக ஊதியத்தில் வேலை தனியார் நிறுவனங்களுக்கு நமச்சிவாயம் வேண்டுகோள்

/

 இளைஞர்களுக்கு அதிக ஊதியத்தில் வேலை தனியார் நிறுவனங்களுக்கு நமச்சிவாயம் வேண்டுகோள்

 இளைஞர்களுக்கு அதிக ஊதியத்தில் வேலை தனியார் நிறுவனங்களுக்கு நமச்சிவாயம் வேண்டுகோள்

 இளைஞர்களுக்கு அதிக ஊதியத்தில் வேலை தனியார் நிறுவனங்களுக்கு நமச்சிவாயம் வேண்டுகோள்


ADDED : பிப் 21, 2026 05:11 AM

Google News

ADDED : பிப் 21, 2026 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரியில், பிப்டிக் நிறுவனம் மற்றும் மா போய் அறக்கட்டளை இணைந்து நடத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் நமச்சி வாயம் பேசியதாவது:

பிரதமர் கடந்த 2021ல் புதுச்சேரிக்கு வந்தபோது, 'புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம்' என்றார். அந்த இலக்கை நோக்கித்தான் தே.ஜ., கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி, மாணவர்களுக்கு அரசு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.

அரசின் பல்வேறு துறைகளில் கடந்த 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை அரசு நிரப்பி இருக்கிறது.

இளைஞர்களுக்கு வேலை மற்றும் அரசு ஊழியர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சாலை, குடிநீர், மின்சார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

மகளிர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை மற்றும் பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் ரூ. 50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டம் என அனைத்துத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

புதுச்சேரியில் படித்தவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் எனப் பல்வேறு நிறுவனங்களை அணுகி இந்த முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, வரும் மார்ச் 1ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி மூலம் பணி ஆணை வழங்க கவர்னர் வழியாக பிரதமர் அலுவலகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

​புதுச்சேரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் காலிப் பணியிடங்கள் உள்ளன. புதுச்சேரி இளைஞர்களுக்கு அதிக ஊதியத்தில் வேலை வழங்க வேண்டும் என, இங்கு வந்துள்ள நிறுவனங்களின் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.






      Dinamalar
      Follow us