sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிப்டிக் சேர்மன் பதவியை நமச்சிவாயம் திடீர் ராஜினாமா! பரபரப்பான முழு பின்னணி அம்பலம்

/

பிப்டிக் சேர்மன் பதவியை நமச்சிவாயம் திடீர் ராஜினாமா! பரபரப்பான முழு பின்னணி அம்பலம்

பிப்டிக் சேர்மன் பதவியை நமச்சிவாயம் திடீர் ராஜினாமா! பரபரப்பான முழு பின்னணி அம்பலம்

பிப்டிக் சேர்மன் பதவியை நமச்சிவாயம் திடீர் ராஜினாமா! பரபரப்பான முழு பின்னணி அம்பலம்


ADDED : மார் 26, 2024 10:38 PM

Google News

ADDED : மார் 26, 2024 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிறுத்தப்பட்டுள்ளார்.அவர், தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்,லோக்சபா தேர்தலில் போட்டியிடுவர்கள் ஆதாயம் தரும் பதவிகளில் இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டாலும்,சில விதி விலக்குகள் உள்ளன. அமைச்சராக இருப்பவர்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 102 இல் விலக்கு உள்ளது.

இதேபோல் 1959 இல் இயற்றப்பட்ட பார்லிமெண்ட் உறுப்பினர் தகுதி இழப்பு சட்டத்திலும் அமைச்சர்கள்,துணை அமைச்சர்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வகையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, அமைச்சர்கள் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் போட்டியிட முடியும்.ஒருவேளை லோக்சபா தேர்தலில் வெற்றிப் பெற்றால்,அதன் பிறகு ராஜினமா செய்தால் போதுமானது.இதனால் நமச்சிவாயம்,உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையில் அமைச்சர் பதவியை ராஜினமா செய்யாத நமச்சிவாயம்,திடீரென பிப்டிக் சேர்மன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்த ராஜினமா ஏற்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?


உள்துறை அமைச்சர் பதவி பெரிய பதவி, பிப்டிக் சேர்மன் சிறிய கார்ப்பரேஷன் பதவி. ஆனால் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நமச்சிவாயம், பிப்டிக் சேர்மன் பதவி விஷயத்தில் திடீரென பின்வாங்கி ராஜினாமா செய்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

ஆதாயம் தரும் பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் அந்த பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்.இதில் சில பதவிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அந்த பதவியில் இருப்பவர்கள் ராஜினாமா செய்ய தேவையில்லை.

இதற்கான எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,களுக்கென தனித்தனி தகுதி இழப்பு சட்டங்கள் இயற்றப்பட்டு ஆதாயம் இல்லாத பதவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் எம்.எல்.ஏ.,தகுதி இழப்பு சட்டம் கடந்த 1994ம் ஆண்டு இயற்றப்பட்டுள்ளது.இதில் தகுதி இழப்பு செய்யப்படாத பதவிகளாக ஏ,பி,சி. என மூன்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் 61 பதவிகள் குறிப்பிடப்பட்டன.இதில் பி பட்டியலில் கார்பரேஷன் பிரிவில் பிப்டிக் பதவி சேர்மனாக பதவியில் இருப்பர் ராஜினாமா செய்யாமல் தேர்தலில் போட்டியிடலாம் என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 1959ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பார்லிமெண்ட் உறுப்பினர் தகுதி இழப்பு சட்டத்திலும்ஆதாய பதவி இல்லாத பதவிகள் மாநில வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.துரதிஷ்டவமாக இந்த பட்டியலில் புதுச்சேரி மாநில பெயரில் ஆதாய பதவி இல்லாத பட்டியல் அதில் இடம் பெறவில்லை.

பொதுவாக மாநிலங்களில் உள்ள பப்ளிக் அல்லது தனியார் சேர்மன்,துணை சேர்மன் பதவிகளுக்கு விலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் பார்லிமெண்ட் உறுப்பினர் தகுதி இழப்பு சட்டத்தில் புதுச்சேரி பிப்டிக் சேர்மன் பதவி பற்றி குறிப்பிடப்படவில்லை;பொதுவாக தான் மாநில சேர்மன் பதவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஆதாயம் தரும் பதவியில் உள்ள நமச்சிவாயம் வேட்பு மனுவினை நிராகரிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் போர்க்கொடி எழுப்பலாம். இதன் காரணமாக ஒருவேளை வேட்பு மனு நிராகரிக்க கூட செய்யலாம்.ஒருவேளை இவ்விவகாரம் கோர்ட்டிற்கு கூட செல்லலாம்.

இதன் காரணாகவே எதற்கு 'ரிஸ்க்' எனக் கருதி, முன் எச்சரிக்கையாக பிப்டிக் சேர்மன் பதவியை நமச்சிவாயம் ராஜினாமா செய்துள்ள பரபரப்பு பின்னணி தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us