sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக அமைதிக்காக நாம பாராயணம்

உலக அமைதிக்காக நாம பாராயணம்

உலக அமைதிக்காக நாம பாராயணம்


ADDED : ஜூன் 01, 2025 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2025 11:44 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்ரீலட்சுமி விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலி சார்பில், 19ம் ஆண்டு விஷ்ணு சஹஸ்ர நாம ஜப யஜ்ஞம் (நாம பாராயணம்) மற்றும் உபன்யாசம் சித்தன் குடி ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.

மண்டலி தலைவர் ராஜாராம தேசிய தாசன் வரவேற்றார். செயலாளர் முத்தியால் ராமானுஜ தாசன் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் வாழ்த்தி பேசினார்.

தொடர்ந்து நடந்த உபன்யாசத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் தாமல் பெருந்தேவி, எங்கும் உளன் கண்ணன் என்ற தலைப்பில் உபன்யாசம் செய்தார்.

விஷ்ணு சஹஸ்ர நாம ஜப யஜ்ஞத்தை (நாம பாராயணம்) திருவந்திபுரம் ஸ்ரீநிவாச சுவாமிகள் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து நாம பாராயணம் நடந்தது. நாமாவளி, லட்சுமி அஷ்டோத்தரம், சாற்றுமறை, மக்கள ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆவார்த்தியாகஇந்த சஹஸ்ர நாம பாராயணம்காலை 5:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடத்தப்பட்டது.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் துளசி, புஷ்பத்துடன் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்


முன்னதாக குயவர்பாளையம் ஆனந்தரங்கப்பிள்ளை தோட்டம் நவனீத கிருஷ்ணன் கோவிலில் சுப்ரபாதம் சேவித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஜெயராம் திருமண்டபத்தினை அடைந்தனர். இதில் வைத்திக்குப்பம் சத்தியமூர்த்தி சுவாமிகள் குழுவினரின் நாம சங்கீர்த்தன பஜனை, நாமாவளி மேள தாளத்துடன் பங்கேற்றனர்.

மண்டலி சார்பில் துணை தலைவர் ஜெயக்குமார், பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us