/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாராயணசாமி - வைத்திலிங்கம் திடீர் ஆலோசனை
/
நாராயணசாமி - வைத்திலிங்கம் திடீர் ஆலோசனை
ADDED : ஜன 20, 2025 06:29 AM

புதுச்சேரி: என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசிற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்த காங்., தயாராகி வருகிறது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் அனைத்து தொகுதிகளிலும் கட்சியை காங்., பலப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள நிர்வாகிகளை சந்தித்து, தொகுதி பிரச்னைகளை முன்னிலைப் படுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் எல்லையம்மன் வீதியில் உள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டிற்கு நேற்று மதியம் 1:00 மணிக்கு காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வந்தார். தொடர்ந்து இருவரும் 45 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். அரசியல் நிலவரம், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.
என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசினை இருவரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக அடுத்தடுத்த போராட்டங்களையும் நடத்த காங்., தயாராகி வருகிறது.
குறிப்பாக வேலைவாய்ப்பு, மதுபான தொழிற்சாலை அனுமதி, கஞ்சா, ரெஸ்ட்டோ பார் அனுமதி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என அடுக்கடுக்கான மக்கள் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி, மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை நடத்த காங்., திட்டமிட்டுள்ளது.