/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'எதிரிகளை முறியடிக்க வேண்டும்' மாஜி முதல்வர் நாராயணசாமி பேச்சு
/
'எதிரிகளை முறியடிக்க வேண்டும்' மாஜி முதல்வர் நாராயணசாமி பேச்சு
'எதிரிகளை முறியடிக்க வேண்டும்' மாஜி முதல்வர் நாராயணசாமி பேச்சு
'எதிரிகளை முறியடிக்க வேண்டும்' மாஜி முதல்வர் நாராயணசாமி பேச்சு
ADDED : ஆக 21, 2025 07:56 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்தநாள் விழா தலைமை அலுவலகத்தில் நடந்தது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கி, ராஜிவ் உருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், பாலன், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், மாநில பொ துச் செயலாளர்கள் மருதுபாண்டியன், திருமுருகன், தனுசு, கருணாநிதி, ரத்னா, மாநில செயலாளர்கள் சரவணன், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், 'வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்., தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமையும். அதற்காக காங்., நிர்வாகிகள் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். என்.ஆர்.காங்., பா.ஜ., கண்ணுக்கு தெரிந்த எதிரிகளாக உள்ளனர். கண்ணுக்கு தெரியாத எதிரிகளும் உள்ளனர். அவர்களை முறியடிக்க வேண்டிய பொறுப்பு தொண்டர்கள் கையில் தான் உள்ளது. காங்., ஆட்சி அமைந்தால் தான், தலைநிமிர்த்து நடக்க முடியும்' என்றார்.
காங்., தலைமை அதிருப்தி
முன்னாள் அமைச்சர் கந்தசாமி பேசுகையில், 'காங்., தலைமை தங்களது அறிவுறுத்தல்களை புதுச்சேரியில் கடைபிடிக்க வில்லை என அதிருப்தியில் உள்ளது. தமிழகத்தில் காமராஜருக்கு பிறகு காங்., ஆட்சி அமையவில்லை. 2026ல் புதுச்சேரியில் ஆட்சியை இழந்தோம் என்றால், தமிழகத்தை போன்ற மோசமான நிலை ஏற்படும். நமக்குள் கருத்து வேறுபாடுகளை தள்ளி வைத்து, இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவோம்' என்றார்.