/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு 'சீட்' நாராயணசாமி தகவல்
/
வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு 'சீட்' நாராயணசாமி தகவல்
வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு 'சீட்' நாராயணசாமி தகவல்
வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு 'சீட்' நாராயணசாமி தகவல்
ADDED : நவ 20, 2024 06:42 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் வரும், 2026, சட்டசபை தேர்தலில் காங்., ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
காங்., அலுவலகத்தில் நடந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் விழாவில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
புதுச்சேரி லோக்சபா தேர்தலில், 28 தொகுதிகளிலும் அதிக ஓட்டுகளை பெற்று, வெற்றி பெற்றதால் காங்., கட்சியினர் மிதப்பில் உள்ளனர். அது கூடாது. புதுச்சேரியில் மக்கள் சேவை செய்யாமல், நிறைய அரசியல் வியாபாரிகள் வந்துள்ளனர். அவர்களை முறியடிக்க வேண்டும்.
கடந்த, 2016,ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 18 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், 17 தொகுதிகளில், அக்கட்சி 'டிபாசிட்' இழந்தது. கடந்த தேர்தலில், காங்., கட்சியில் இருந்து ஓடியவர்களை, தேர்தலில் நிற்க வைத்து, கோடிக்கணக்கில் செலவு செய்ததால், இன்று 6 பேர் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். அவர்களில் 4 பேர், லாட்டரி அதிபரை கவுரவிக்கின்றனர். ஒரு எம்.எல்.ஏ., அவரது காலில் விழுகிறார்.
அந்த லாட்டரி அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, ரூ.9 கோடியை கைப்பற்றி, ரூ.5 கோடியை முடக்கி வைத்துள்ளது.
லோக்சபா தேர்தலில், மக்கள் நல்ல தீர்ப்பளித்தனர். அதேபோன்ற தீர்ப்பு தான், சட்டசபை தேர்தலிலும் மக்கள் கொடுப்பார்கள் . வெற்றி பெற வாய்ப்பு உள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும் என கட்சித்தலைமை கூறி உள்ளது. வரும், 2026,ல், காங்., மீண்டும் ஆட்சிக்கு வர பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.