தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நெல்லித்தோப்பு தொகுதியில் மீண்டும் போட்டி; தி.மு.க.,வினருக்கு நாராயணசாமி பதிலடி

 நெல்லித்தோப்பு தொகுதியில் மீண்டும் போட்டி; தி.மு.க.,வினருக்கு நாராயணசாமி பதிலடி

 நெல்லித்தோப்பு தொகுதியில் மீண்டும் போட்டி; தி.மு.க.,வினருக்கு நாராயணசாமி பதிலடி


ADDED : பிப் 10, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நெல்லித்தோப்பில் மீண்டும் போட்டியிட, முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீடு வீடாக மிக்சி வழங்குவதால் தி.மு.க., வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு முதல்வராக இருந்த நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடாமல் தேர்தல் பணி மட்டும் செய்து விட்டு அமைதியாக இருந்து விட்டார்.

அந்தத் தேர்தலில் கூட்டணி கட்சியான திமுக 6 இடங்களிலும், காங்., 2 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர்.காங் 10, பாஜ. 6 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடந்த ஆண்டு முதல் தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த தேர்தலில் தி.மு.க., போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. இந்நிலையில், வரும் தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் மீண்டும் தி.மு.க., நிற்பதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி திடீரென மிக்ஸி கொடுத்து ஓட்டு கேட்டு வருவது தி.மு.க.,வினருக்கு பெருத்த அதிர்ச்சி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டணிக்கு வராத காங்., கட்சியை தி.மு.க.,வினர் கடுமையாக புதுச்சேரியில் விமர்சித்து வந்த நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில் நாராயணசாமி போட்டியில் குதித்துள்ளார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us