/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசார் மீது தாக்கு போதை ஆசாமிக்கு வலை
/
போலீசார் மீது தாக்கு போதை ஆசாமிக்கு வலை
ADDED : அக் 08, 2024 03:12 AM
அரியாங்குப்பம்,: பொது இடத்தில் மது போதையில் தகராறு செய்தவரை, பிடிக்க சென்ற இரண்டு போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம் பழைய பாலம் அருகே, நேற்று மாலை ஒருவர் மது போதையில், பீர் பாட்டிலுடன் நின்று அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். அந்த வழியாக ரோந்து பணியில் இருந்த சிரஞ்சீவி, மோகன்தாஸ் ஆகிய இரு போலீசார் அந்த நபரை பிடிக்க முயன்றனர்.
போதையில் இருந்த அந்த நபர், போலீசார் இருவரையும் தாக்கி விட்டு தப்பி சென்றார். விசாரணையில் அவர், அரியாங்குப்பம் காந்தி நகரை சேர்ந்த ரவிசேகர், 51; என தெரியவந்தது.
இதுகுறித்து, போலீசார் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிந்து, தப்பியோடிய நபரை தேடிவருகின்றனர்.