/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
22 ஆசிரியர்களுக்கு 'நேஷன் பில்டர்' விருது
/
22 ஆசிரியர்களுக்கு 'நேஷன் பில்டர்' விருது
ADDED : செப் 22, 2024 02:04 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி ரோட்டரி எலைட் சங்கம் சார்பில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, 'நேஷன் பில்டர்' விருது வழங்கும் விழா, தனியார் விடுதியில் நடந்தது. விழாவில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த 22 ஆசிரியர்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.
பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் சிவகாமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார். விழாவிற்கான நிதியை ரோட்டரி உறுப்பினர் இளங்கோ அளித்தார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் செந்தில் நாராயணன், ரோட்டரி வட்டச் செயலாளர் கிருபாகரன் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியை ரோட்டரி உறுப்பினர் கோபால் தொகுத்து வழங்கினார்.