/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் தேசிய அமெச்சூர் பந்துவீச்சு போட்டி
/
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் தேசிய அமெச்சூர் பந்துவீச்சு போட்டி
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் தேசிய அமெச்சூர் பந்துவீச்சு போட்டி
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் தேசிய அமெச்சூர் பந்துவீச்சு போட்டி
ADDED : ஏப் 10, 2025 04:21 AM

வில்லியனுார்: தேசிய அளவிலான அமெச்சூர் பந்துவீச்சு போட்டி வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
புதுச்சேரி அமெச்சூர் பந்துவீச்சு சங்கத்துடன் இணைந்து தேசிய அளவிலான 32வது ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் பந்துவீச்சு சாம்பியன்ஷிப் போட்டி அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
இப்போட்டியில் தமிழ்நாடு, ஒடிசா, குஜராத், தெலுங்கானா, பீகார், மேற்கு வங்கம், டெல்லி, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 250க்கும் மேற்பட்ட வீரர்களும் 50 பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் கலந்துகொண்டனர்.
துவக்க விழாவில் இந்திய பந்துவீச்சு கூட்டமைப்பு தலைவர் மணி, பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், தமிழ்நாடு பந்துவீச்சு சங்க துணைத் தலைவர் அறிவொளி, புதுச்சேரி வெட்ரன் அத்தலடிக் அசோசியேஷன் ராமச்சந்திரன், புதுச்சேரி அமெச்சூர் பந்துவீச்சு சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, அந்தோணிசாமி மற்றும் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி முதல்வர் தேவநேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடந்த போட்டியில் முதலிடத்தை கர்நாடக மாநில ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும், 2ம் இடத்தை தமிழக ஆண்கள் அணி மற்றும் கர்நாடக பெண்கள் அணியும், மூன்றாம் இடத்தை டில்லி ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பிடித்தன.