/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய மாநாடு
/
காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய மாநாடு
காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய மாநாடு
காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய மாநாடு
ADDED : நவ 14, 2025 01:50 AM

புதுச்சேரி: லாஸ்பேட் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தாவரவியல் துறையில், 'உயிரியல் பன்முகத்தன்மை பாதுகாப்பு, அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள்' குறித்த இரண்டு நாள் தேசிய மாநாடு நடந்தது.
நிறுவனத்தின் இயக்குநர் கோச்சடை தலைமை தாங்கினார், புதுச்சேரி பல்கலைக்கழக சூழலியல் பேராசிரியர் சுந்தரபாண்டியன் மாநாட்டை துவக்கி வைத்தார். தேர்வு கட்டுப்பாட்டாளர் அர்ஜூனன், ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்பாளர்கள் சமர்ப்பித்த 45 ஆராய்ச்சி கட்டுரைகள் உள்ளடக்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.
பேராசிரியர் சுந்தரபாண்டியன் ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்தும், பேராசிரியர் சங்கமித்ரா பாசிகளின் பன்முகத்தன்மை குறித்தும் பேசினர். சுற்றுச்சூழல் ஆர்வலர் புபேஷ் குப்தா பல்லுயிர் பாதுகாப்பில் விலங்கு சிற்பங்களைப் பயன்படுத்துவது குறித்து பேசினார்.
டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபர்ணா பல்லுயிர் பாதுகாப்பில் திசு வளர்ப்பின் பயன்பாடு குறித்தும், ஷில்லாங்கிலிருந்து தாவரவியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானி கோட்டைமுத்து, வடகிழக்கு மாநிலங்களில் தாவர பன்முகத்தன்மை குறித்தும் பேசினர். டாக்டர் அனிமா நந்தா, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் சத்தியபாமாஎதிர்ப்பு நோய்க்கிருமிகள் குறித்தும், காரைக்கால் அறிஞர் அண்ணா கல்லுாரி பேராசிரியர் சம்பந்தன், காரைக்கால் தாவர பன்முகத்தன்மை குறித்தும் பேசினர்.
ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பன போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாநாட்டை தாவரவியல் துறை பேராசிரியர்கள்நாயக், குமரேசன், ஷேகாவத், விக்ராந்த், ஆனந்தி, ஜானகி ஆகியோர் செய்திருந்தனர்.

