/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவுநீர் வாய்க்கால் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
/
கழிவுநீர் வாய்க்கால் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
கழிவுநீர் வாய்க்கால் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
கழிவுநீர் வாய்க்கால் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : நவ 14, 2025 01:50 AM

வில்லியனுார்: மங்கலம் தொகுதி, ஆரியப்பாளையம், பாரதி நகர் சாலையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை வேளாண் அமைச்சர் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்டம் சார்பில், ரூ.21.05 லட்சம் திட்ட மதிப்பில் மங்கலம் தொகுதி, ஆரியப்பாளையம், பாரதி நகரில் உள்ள சாலைகளில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூமி பூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் வைத்தியநாதன்,உதவிப் பொறியாளர் சீனிவாசராம், இளநிலை பொறியாளர் தேவர், ஒப்பந்ததாரர் ராமையா உட்பட பலர் பங்கேற்றனர்.