/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் தேசிய மாநாடு
/
மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் தேசிய மாநாடு
மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் தேசிய மாநாடு
மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் தேசிய மாநாடு
ADDED : ஜூன் 13, 2025 03:33 AM

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் 3வது தேசிய மாநாடு கல்லுாரி கலையரங்கில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் முத்தமிழ்செல்வி வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் விழாவை துவக்கி வைத்தார்.
செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார். விழாவில் பொருளாளர் ராஜராஜன், துணை செயலாளர் வேலாயுதம், மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் இயக்குனர் காக்னே, டீன் அகடெமிக் கார்த்திகேயன், டீன் ரீசேர்ச் சஞ்சய், மருத்துவ மேற்பார்வையாளர் பிரகாஷ், பதிவாளர் தட்சணமூர்த்தி, செவிலிய கல்லுாரி முதல்வர் முத்தமிழ்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்சியில் முதன்மை விருந்தினராக புதுச்சேரி பல்கலைக்கழக டீன் வெங்கடேஸ்வர சர்மா கருத்துரை வழங்கினார். மாநாட்டில் பேராசிரியர்கள் மரகதம், கோவேந்தன், ரேணுகா, தமிழ்புலவேந்திரன், கோவிந்தராஜன், குமாரி, மரியா தெரசா மற்றும் மணிமேகலை ஆகியோர் விரிவுரையாற்றினர்.
புதுச்சேரியில் அனைத்து செவிலிய கல்லூரியிலிருந்து பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
துணை பேராசிரியர் சக்திப்பிரியா நன்றி கூறினார்.