/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைவினை கலைஞர்களுடன் தேசிய வளர்ச்சி ஆணையர் சந்திப்பு
/
கைவினை கலைஞர்களுடன் தேசிய வளர்ச்சி ஆணையர் சந்திப்பு
கைவினை கலைஞர்களுடன் தேசிய வளர்ச்சி ஆணையர் சந்திப்பு
கைவினை கலைஞர்களுடன் தேசிய வளர்ச்சி ஆணையர் சந்திப்பு
ADDED : ஜன 23, 2026 05:35 AM

புதுச்சேரி: தேசிய கைவினை வளர்ச்சி ஆணையர் அமிர்தாராஜ், முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தை பார்வையிட்டார்.
மத்திய ஜவுளி துறையின் கீழ் இயங்கும் கைவினை வளர்ச்சி ஆணையத்தின் ஆணையர் அமிர்தா ராஜ் மூன்று நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வந்தார். புதுச்சேரியில் உள்ள புவிசார் குறியீடு பெற்ற வில்லியனுார் கைவினை கூடம், திருக்கனுார் பேப்பர்மிஷின், முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தை பார்வையிட்டார்.
முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள 21 வகையான கைவினைப் பொருட்களின் அரங்குகளை பார்வையிட்ட ஆணையர் அமிர்தா ராஜ், தேசிய அளவில் நடக்கும் விருதுகளுக்கான போட்டிகளில் புதுச்சேரி கலைஞர்களை பங்கேற்க அறிவுறுத்தினார்.
மேலும், கைவினை பூங்காவை பார்வையிட்டு, புதுச்சேரியில் கைவினை அருங்காட்சியகம் அமைக்க, அரசு இடம் ஒதுக்கினால் ரூ. 6 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, உறுதி அளித்தார்.
இதில், மண்டல இயக்குநர் லட்சுமணராவ், உதவி இயக்குநர் ரூப் சென்டர், பத்மஸ்ரீ விருது பெற்ற கைவினை கலைஞர் முனுசாமி, ராஜ சிற்பி, கைவினை கலைஞர்களின் புதுச்சேரி சங்கத் தலைவர் சேகர், துணைத் தலைவர் புவனா, செயலாளர் ரமேஷ், தேசிய விருது பெற்ற கைவினை கலைஞர் மாசிலாமணி மற்றும் அனைத்து கைவினை கலைஞர்கள் உடனிருந்தனர்.

