/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய பேரிடர் மீட்பு குழு பாதுகாப்பு ஒத்திகை
/
தேசிய பேரிடர் மீட்பு குழு பாதுகாப்பு ஒத்திகை
ADDED : நவ 30, 2024 04:48 AM

புதுச்சேரி : வங்கக்கடலில் நீடித்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக வலுவடைந்து, இன்று காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என சென்னை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி புதுச்சேரிக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு குழுவானது, காரைக்காலிலும், மற்றொரு குழுவானது, புதுச்சேரியிலும் உள்ளது.
இந்நிலையில் காலாப்பட்டு தனியார் தொழிற்சாலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று முன்தினம் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று சோலை நகர் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொண்டனர்.

