ADDED : ஜூலை 03, 2026 02:28 AM

புதுச்சேரி: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை, வில்லியனுார் குமுகாயம் நண்பர்கள் வட்டம் சார்பில், மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.
அதையொட்டி,வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனை, வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் சிவராமச்சந்திரன், வில்லியனுார் மூத்த குடிமக்கள் சங்கத் தலைவர் தண்டபாணி,ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாக குழு உறுப்பினர் ராமன் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள், குமுகாயம் நண்பர்கள் மருத்துவர்களின் சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை வில் வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்றத்தினர் செய்திருந்தனர்.
