தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேசிய டாட்ஜ்பால் போட்டி: புதுச்சேரி அணி மூன்றாம் இடம்

தேசிய டாட்ஜ்பால் போட்டி: புதுச்சேரி அணி மூன்றாம் இடம்

தேசிய டாட்ஜ்பால் போட்டி: புதுச்சேரி அணி மூன்றாம் இடம்


ADDED : மே 01, 2025 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2025 04:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: தேசிய அளவிலான டாட்ஜ்பால் சாம்பியன்ஷிப் போட்டியில், புதுச்சேரி அணி மூன்றாம் இடம் பிடித்து பரிசுகளை வென்றுள்ளது.

இந்திய டாட்ஜ்பால் பெட்ரேஷன் சார்பில், மூன்றாவது தேசிய அளவிலான சீனியர் டாட்ஜ்பால் சாம்பியன்ஷிப் போட்டி, கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள பாலா விகாஸ் பள்ளி உள் விளையாட்டு அரங்கில், கடந்த 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்தது. இதில், புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கலந்து கொண்டனர். இப்போட்டியில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

அதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவிலும், மூன்றாவது இடம் பிடித்து, பதக்கங்களை வென்றனர். இந்நிகழ்ச்சியில், இந்திய டாட்ஜ்பால் பெட்ரேஷன் துணை தலைவராக, புதுச்சேரி அமெச்சூர் டாட்ஜ்பால் அசோசியேஷன் தலைவர் ராயல் டொமினிக் தேர்வு செய்யப்பட்டார். மூன்று பிரிவு போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்த வீரர் மற்றும் விராங்கனைகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., வாழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us