தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் பரிசளிப்பு 

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் பரிசளிப்பு 

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் பரிசளிப்பு 


ADDED : செப் 23, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் 9-வது தேசிய ஊட்டச்சத்து மாத விழா, ஜவகர் நகர் சமுதாய நலக் கூடத்தில் நடந்தது. 

உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ., நாராயணசாமி தலைமை தாங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழக சமூகப் பணித் துறையின் மூத்த திட்ட உதவியாளர் அஜித்குமார், குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் ஜெயப்பிரியா ஆகியோர் ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக ஏற்படும் பிரச்னைகள், அதனை தவிர்க்கும் ஆரோக்கியமான உணவு முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, மகளிர் குழுவினர் ஆரோக்கியமான, சத்துள்ள சிறுதானிய உணவு வகைகளை தயார் செய்து வந்து காட்சிப்படுத்தினர்.

தொடர்ந்து, ‘சுகாதாரமான குழந்தை’ தலைப்பில் ஆரோக்கியமான குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us