ADDED : செப் 23, 2026 05:31 PM
அரியாங்குப்பம்: பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கலைக்கல்லுாரியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லுாரி வளாகத்தில் நேற்று காலை 10:30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், பேராசிரியர்கள் பற்றாக்குறையால், பாடங்கள் நடத்தாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பருவத்தேர்வு வரும் நிலையில், பல்வேறு பாடங்களில் மாணவர்கள் மதிப்பெண் குறைவாக எடுக்கும் நிலை உள்ளது.
கல்லுாரியில், மாணவர்களுக்கு கேண்டீன் வசதி இல்லாமல் உள்ளதால் மாணவர்கள் அதிக துாரத்தில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று சாப்பிடும் நிலை உள்ளது. கல்லுாரியில் சரியான முறையில் குடிநீர் வராமல் இருப்பது, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வலிறுயுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம், கல்லுாரி முதல்வர் ஹென்னா மோனிசா பேச்சு வார்த்தை நடத்தி, பேராசிரியர்கள் நியமிக்க கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையேற்று, மதியம் 12:30 மணிக்கு மாணவர்கள் போராடத்தை கைவிட்டு, வகுப்புகளுக்கு சென்றனர்.
